24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

புகைப்படம் எடுக்க முயன்றபோது விபரீதம்: தந்தை, மகன் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி!

தெனியாய பல்லேகம சத்மலை நீர்வீழ்ச்சியில் நீராட வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, ஜிந்தோட்டை, மஹா ஹபுகல பகுதியைச் சேர்ந்த மொஹமட் தாஹிர் மொஹமட் மன்சார் (வயது 48) மற்றும் அவரது மகன் மொஹமட் மன்சார் மொஹமட் மொஹீர் (வயது 16) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மகனை புகைப்படம் எடுக்க தயாராகி கொண்டிருந்த போது மகன் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற தந்தை நீர்வீழ்ச்சியில் குதித்ததாகவும், அதன் பின்னர் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்பதற்கு கடற்படையினரின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன், தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

Leave a Comment