27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

‘குண்டர்களே உறுப்பினரை வெளியேற்றுங்கள்’; த.தே.கூ தவிசாளர் ஆத்திரம்; செங்கலடி பிரதேச சபையில் அமைதியின்மை!

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் விசேட அமர்வில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

செங்கலடி பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று காலை செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனினால் வழங்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக குறித்த விசேட அமர்வு இன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

அவரின் பிரேரணையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறைக்கு செல்லும் வீதிக்கு கிரவல் இடல் மற்றும் செங்கலடி மத்திய கல்லூரி முன்னும் பாடசாலை வளாகப் பகுதியிலும் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்ய கோரப்பட்டிருந்தது.
எனினும் இன்றைய சபை அமர்வில் வனேந்திரன் சுரேந்திரன் கலந்து கொண்டிருக்கவில்லை. இதனால் அவர் சமர்ப்பித்த பிரேரணை ஆராயப்படவில்லை.

இதேவேளை இன்றைய அமர்வில் தவிசாளர் சி.சர்வானந்தன் கருத்து தெரிவிக்கையில், எனது புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவேற்றிய உறுப்பினர் ஒருவர் இங்குள்ளார். நான் சபைக்கு தவிசாளராக வந்த பின் என்னை இவ்வாறு முகப்புத்தகங்களுடாக இழிவு படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்.

இவர் இவ்வாறு செயற்படுவதால் இவருக்கு எதிராக ஒரு மாத காலம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இதற்கு சபையின் அனுமதி கேட்கின்றேன் என தெரிவித்தார்.

தன்னைப்பற்றி முகப்புத்தகத்தில் இடப்பட்ட பதிவுகளை பிரிண்ட் எடுத்து வந்து சபையில் காட்சிப்படுத்தியிருந்தார்.

இது தனி ஒருவர் சார்ந்து இருப்பதால் சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக் முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் ந.மோகராஜன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செங்கலடி பிரதேச சபையின் உப தவிசாளர் கா.இராமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர். ந.திருணாவுக்கரசு ஆகியோர் தெரிவித்தனர்.

இதேவேளை, தவிசாளரின் அனுமதி இல்லாமல் தொலைபேசியில் உரையாட முயன்றார் என கூறி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் புத்திசிகாமணி சசிகரனை சபையில் இருந்து வெளியேற்றுமாறு தவிசாளர் தெரிவித்தார்.

‘குண்டர்களே இவரை வெளியேற்றுங்கள்.. குண்டர்களே இவரை வெளியேற்றுங்கள்’ என தவிசாளர் தெரிவித்தவாறு, குறித்த உறுப்பினரை ஒரு மதாகாலம் சபை நடவடிக்கையில் கலந்துகொள்ளாது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததுடன், இத்துடன் சபை கலைகின்றது என கூறி வெளியேறினார்.

தவிசாளர் வெளியேறியதன் பின் உறுப்பினர்களுக்கிடையே தவிசாளரின் வெளியேற்றம் தொடர்பில் சிறு அமைதியின்மை ஏற்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் நல்லையா சரஸ்வதி, ஏற்கனவே தவிசாளரிடம் தொலைபேசி உரையாடல் தொடர்பில் உறுப்பினர் அனுமதி பெற்றிருந்தும், தவிசாளர் பழிவாங்கும் எண்ணத்துடன் என்று செயற்படுகிறார். அவர்களின் சொந்தப் பிரச்சினைக்காக சபை நடவடிக்கையை கலைக்கின்றர். இது சபையை அவமானப்படுத்தும் விடயம் எனவும் தெரிவித்தார்.

இதே வேளை உறுப்பினர் பு.சசிகரன் தெரிவிக்கையில், தவிசாளர் வேண்டும் என்று இவ்வாறு நடந்துகொண்டார். நான் உள்ளுராட்சி பிராந்திய பணிப்பாளர் மணிவன்னனுடன் தொலைபேசியில் உரையாட ச்சென்றேன். 2020 ம் ஆண்டு முகப்புத்தக பதிவை இன்று பிரிண்ட் எடுத்து வந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

இதே வேளை இன்றைய விசேட சபை அமர்விற்கான பிரேரணைகளை வழங்கி சபை ஒன்று கூடகாரணமாகவிருந்த உறுப்பினர் வ.சுரேந்திரன் தலைமறைவாகியதால் சபை நடவடிக்கையில் குழப்பம் ஏற்பட்டதாகவும் உறுப்பினர் கருத்து தெரிவித்தவாறு கலைந்து சென்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் மின்சாரத் தடை – கடும் அவதியில் மக்கள்

east tamil

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

Leave a Comment