40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது ‘திருடர்’ கைது!

Date:

நாட்டின் பல பகுதிகளில் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது ‘திருடரை’  எப்பாவல பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் சந்தேக நபர் மின்னேரிய புகையிரத நிலைய சந்தியில் வசிக்கும் 79 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். கைது செய்யப்படும்போது அவர் திருடிய 06 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருட்டுச் சம்பவங்களுக்கு பெயர் போன இந்த முதியவர் மீது, 17 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது. நாட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இந்த முதியவரும் இருந்தார்.

அவருக்கு ஏற்கனவே16 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

எப்பாவல பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு முறைப்பாடுகளையடுத்து பொலிசார் சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருடர் சிக்கினார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்