நாட்டில் இன்று 18 கோவிட் தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
COVID-19 தொற்றினால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 14,962 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
9 ஆண்களும் 9 பெண்களும் நேற்று மரணித்தனர்.
3 ஆண்களும் 3 பெண்களும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும். 6 ஆண்களும் 6 பெண்களும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
இதேவேளை, இன்று இதுவரை 563 நபர்கள் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் பதிவான COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 586,746 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 228 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,313 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 11,471 தொற்றாளர்கள் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.