மேயருடன் வந்த கூட்டத்தினை சார்ந்தவர்களே என்மீது தாக்குதல் நடாத்தினர் இதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது இதனை நான் விரைவில் வெளியிடுவேன் செய்திகளை மறுதலையாக வெளிட்டவர்கள் அப்போதாவது புரிந்து கொள்வார்கள் என் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன் தெரிவித்தார்
கடந்த வியாழக் கிழமை மாநகர ஆணையாளர் மீது அவரது அலுவலகத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது இதன்போது அவர் மட்டக்களப்பு போதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்தார். இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலைவிட்டு வெளியேறிய பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில்,
நான் எனது அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டு இருக்கின்ற பொழுது மட்டக்களப்பு மாநகர சபையினுடைய முதல்வர் தன்னுடைய மாநகர ஆளுங்கட்சி உறுப்பினர்களான விளையாட்டு உத்தியோகத்தர் றூபன்ää விளையாட்டு உத்தியோகத்தர் பூபாலராஜாää அவர்களுடன் பதில் வேலைத் தொழிலாளியாகிய ஜனார்த்தனன் ஆகியோரை அழைத்து வந்து எனது அலுவலகத்தில் புகுந்தனர் எனது கதிரையில் இருக்கும் போது என்னை மிகுந்த பலமாக தாக்கினார்கள் அவர்களுடைய கைக் கூலியான ஜனார்த்தனன் என்ன ஆயுதம் கொண்டுவந்தாரோ தெரியவில்லை எனது முகத்தை நோக்கி தாக்குதல் நடத்தினார். இதன்போது நான் எனது கையினால் எனது முகத்தினை காப்பாற்றிக் கொண்டேன். இதனால் எனது கையில் வெடிப்புக்கள் எற்பட்டுள்ளது. இவ்வேளையில் கதிரையில் இருந்து சரிந்து விழுந்த பொழுது எனது விலா எலும்பிலே வெடிப்புக்களும் எற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு கொலை முயற்சியொன்று எற்கனவே மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்திலே சாரதி சோதி அவர்கள் அதிஸ்ரவசமாக வந்து என்னை காப்பாற்றினார் இந்த முயற்றிச்சியை மதன் பூபாலராஜா,ஜெயா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் இரண்டாவது தடவையாக மேற் கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் முயற்சியின் போது நான் நேரடியாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். இதன்பிற்பாடு வைத்தியர்கள் எனது கைக்கு பீஓபி போட்டு இரண்டு வாரங்களின் பின்னர் மேலதிக சிகிச்சைககளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கான நீதி பெறப்படும் வரை நான் போராடுவதற்கு தயாராக உள்ளேன். இது இவ்வாறு இருக்க மேயருக்கு சார்பான இயங்குகின்ற ஊடங்கள்ää செய்தித் தளங்கள் இந்த உண்மையை திரிபுபடுத்தி மறுதலையாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு செய்தியை வெளியிடும் முன்னர் சற்று சிந்தித்திருக்க வேண்டும். மாநகர முதல்வர் அவர்கள் கதவினைத் திறந்து கொண்டு உள்ளே வருகின்றார் அதற்கு பின்னால் எங்களுடைய திட்டமிடல் பகுதியினுடைய பிரதம லிகிதர் தேவானந்தன் அவர்கள் அவர்களுக்கு பின்னால் வருகின்றார் அதற்கு பின்னால் உறுப்பினர் றூபன் வருகின்றார்ää அதற்கு பின்னால் மற்றய உறுப்பினர் பூபாலராஜா வருகின்றார். இந்த சு10ழ்நிலையில் நான் எவ்வாறு ஜனார்த்தனன் மீது தாக்குதல் நடாத்தி காயப்படுத்த முடியும் என்பதனை இந்த செய்தி வெளியிட்ட ஊடகங்கள் உட்பட அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் இதற்கான உண்மை வீடியோ என்னிடம் உள்ளது அதனை நான் மிக விரைவில் வெளியிடுவேன் இந்த சம்பவத்தின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையில் என்ன நடக்கின்றது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
அறுபது வயது நிரம்பிய என்மீது தாக்குதல் நடாத்தியதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது எனவே நான் நீதி கிடைக்கும்வரை தனிமனிதனாக போராடுவதற்கு தயாராக இருக்கின்றேன். என்னால் இதனை தாங்கமுடியவில்லை இந்த சபையில் நான் நேர்மையாக செயற்பட்டு வருகின்றேன் நான் இந்த சபையில் திருடவில்லைää வாகன துஸ்பிரயோகம் செய்யவில்லை மக்களுக்காக இருபத்தினான்கு மணி நேரமும் கடமையாற்றி வருகின்றேன். இதனை மக்கள் அறிவார்கள் அப்படியான சு10ழ் நிலையில் முதல்வர் அவர்கள் றவுடிகளை வைத்து என்னை அடித்துள்ளார் இதற்கான காரணமென்ன. இந்த விடயத்தை நேரடியா கண்ட சாட்சியாக சுது அவர்கள் இருக்கின்றார் (இதன் போது சுது அவர்கள் தான் கண்ட உண்மையை வெளிப்படுத்தினார்) பின்னர் தொடர்ந்த ஆணையாளர் இவ்வாறான மிலேச்சதனமான தாக்குதலை நடத்துவதற்காகவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து மக்கள் அவரை மேயராக்கினார்கள். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.
நான் ஒருசாதாரணமான உத்தியோகத்தர். என்னிடம் ஆயுதபல் இல்லை ஆள் பலமும் இல்லை என்னிடம் இருப்பது நிர்வாக சேவை பலம்மாத்தரமே நான் எதிர்பார்க்கவில்லை இவ்வாறான சந்வீக ரீதியானதொரு கட்சியில் இருந்து கொண்டு இவ்வாறான தாக்குதலை நடத்துவாரென்று. அவருடைய பணபலம் சகல இடங்களிலும் வென்றிருக்கின்றது. கண்ணால் கண்ட சாட்சி உள்ளதுää மாறாக நான் தக்கப்பட்டமைக்கான எனது உடல் ரீதியான சேதங்கள் சட்ட வைத்திய அதிகாரியூடாக நிருபிக்கப்பட்டுள்ளது. இந்த சு10ழ் நிலையில் தாக்குதல் நடாத்தியவர் சுதந்திரமாக வெளியில் திரிகின்றமை ஊடாக திட்டமிட்டு தாக்கதல் நடத்தப்பட்டமை புலானாகின்றது. இந்த நிலையில் மேயர் சார்ந்த கட்சியிடம் வடகிழக்கு ஆட்சியை வழங்கிவிட்டால் எவ்வாறு இருக்கும் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந் நிலையில் இவ்வாறான அராஜக செயற்பாடுகளை மேற்கொள்பவர்களை கட்சி கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த கட்சி இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றது என்றுதான் அர்த்தப்படும்
.
எனவே மிகவிரைவில் என்மீது தாக்குதல் நடத்தியமைக்காகன வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன் இந்த நேரத்திலாவது மேயரின் கதையை மாத்திரம் கேட்டு ஒருகட்சியை மாத்திரம் சார்ந்து மறுதலையான செய்திகளை சேகரித்த மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் இதனை வெளியிட்ட தேசிய பத்திரிக்கைகள் உண்மைகளை புரிந்து கொள்ளும் என்பதனை இதன் போது தெரிவித்துக் கொள்கின்றேன்