26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

யாழ் பல்கலைக்கு முன்பாக வெற்றுக்காணிக்குள் மருத்துவ கழிவுகள் எரிப்பு: நொதேர்ன் சென்ரல் தனியார் வைத்தியசாலை மீது வழக்கு தொடர முடிவு!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் உள்ள வெற்றுக் காணியில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நொதேர்ன் சென்ரர் தனியார் வைத்தியசாலையின் நீண்ட கால மருத்துவக் கழிவுகள் நேற்றிரவு இப் பகுதியில் தீயிட்டு கொழுத்தப்படுவதாக மக்கள் செய்த முறைப்பாட்டின் பெயரில் மாநகர சபை உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த சுகாதாரத் துறையினர் ஆதாரங்களைத் திரட்டியதுடன், நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலை பிரதிநிதியை அழைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வைத்தியசாலை பிரதிநிதி கழிவுகள் எரிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதுடன், அதை அகற்றுவதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் பொலிசாருக்கும், சுற்றாடல் அதிகாரசபையினருக்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

வைத்தியசாலை அனுமதி பெறும்போது கழிவு அகற்றுவது தொடர்பாக சமர்ப்பித்த தகவல்களை வைத்தியசாலை மீறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சுற்றாடல் அதிகாரசபை வைத்தியசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கோரவுள்ளது.

அத்துடன், ஆபத்தான மருத்துவ கழிவுகளை பொறுப்பில்லாமல் மக்களிற்கு அபாயமேற்படுத்தும் விதமாக எரித்தழித்த விவகாரத்தில், நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலை மீது, யாழ்ப்பாணம் பொலிசார் ஊடாக யாழ் மாநகரசபை வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்!

Pagetamil

புதிய கடற்படை தளபதி நியமனம்

Pagetamil

யாழில் போராட்டம்

Pagetamil

இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது

east tamil

“தனியார் வகுப்புகள் இல்லாமல் சிறந்த கல்வி பெற இயலும்” – ஜோசப் ஸ்டாலின் கருத்து

east tamil

Leave a Comment