கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் நடவடிக்கையை பாராட்டிள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.
ஜனநாயக நாட்டில் அரசாங்கம் தவறான தீர்மானங்களை எடுக்குமாயின் பிரஜைகளுக்கு தமது கருத்துக்களை வெளியிட உரிமை உண்டு என தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இன்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க, அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டச் சான்றிதழைப் பெற மறுத்தமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, மேற்படி கருத்தை வெளியிட்டார்.
மாணவர்கள் ஒரு அமைதியான ஆனால் சக்திவாய்ந்த செய்தியின் மூலம் ஜனநாயகத்தை அதன் உச்சத்திற்கு கொண்டு வந்தனர் என பாராட்டியுள்ளார்.
மாணவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தவில்லை அல்லது ஆக்ரோஷமாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்று கூறி, மாணவர்களின் செயல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
மாணவர்களின் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க பாராட்டினார்.