சில பகுதிகளில் மழை பெய்யலாம்!

Date:

தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. தென்மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவானஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காங்கேசந்துறையிலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்