24.8 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை: பொலிசார் தீவிர விசாரணை!

கொழும்பு, பொரளை- மருதானை வீதியிலுள்ள நகைக்கடை ஒன்றிற்கு கடந்த 11ஆம் திகதி மாலை ஆயுதம் தாங்கிய இரு கொள்ளையர்கள் புகுந்து அதன் உரிமையாளரையும் ஊழியர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் 5 சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

பொரளை பொலிஸார், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு வலய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை உள்ளடக்கிய 5 பொலிஸ் குழுக்களே இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

பிற்பகல் 2.50 மணியளவில் தங்க நகைகளை வாங்குவதாக கூறி கடைக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள், கைத்துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டு, உரிமையாளர் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

நகைக்கடையிலிருந்த நகைகளை சூட்கேஸில் வைத்துக் கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இரண்டு கொள்ளையர்களும் முகத்தை மறைத்து தலைக்கவசம் அணிந்திருந்தனர்.

கொள்ளையர்கள் கொள்ளைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கம் மற்றும் அது குறித்த தகவல்கள், சி.சி.ரி.வி. காணொளி உள்ளிட்ட அறிவியல் தடயங்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

UPDATE – காட்டிற்குள் உல்லாசமாக சென்ற எட்டு பேர் கைது

east tamil

உலகில் விசா பெற எளிதான நாடுகளின் தரவரிசையில் இலங்கை 33வது இடத்தில்

east tamil

Leave a Comment