ஒருவரால் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய அரிய வால் நட்சத்திரத்தை நாளை (12) வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சி – 2021 – ஏ – 1 என அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரத்துக்கு லியோனார்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வானியலாளர் கிரெக் லியோனார்ட் கண்டறிந்ததால், இந்த பெயரிடப்பட்டது. இந்த வருடத்திலேயே வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. கிரெக் லியோனார்ட் கண்டறிந்த 13வது வால் நட்சத்திரம் இதுவாகும்..
வால் நட்சத்திரம் லியோனார்ட் நாளை காலை கனடா உள்ளிட்ட வட அமெரிக்கர்களுக்கும், நாளை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உலகின் பிற பகுதிகளுக்கும் தெரியும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.
பூமிக்கு மிக அருகில் (சுமார் 34.9 மில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 21.7 மில்லியன் மைல்கள்) வால் நட்சத்திரம் வரும்.
இது ஜனவரி 3 ஆம் திகதி சூரியனை நெருங்கிச் செல்லும். சூரியனின் சக்தி வாய்ந்த வெப்பம் மற்றும் கதிர்வீச்சில் அழியும் அபாயமும் உள்ளது.