28.3 C
Jaffna
April 28, 2024
இந்தியா முக்கியச் செய்திகள்

நாகலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து இராணுவம் சுட்டதில் 13 தொழிலாளர்கள் பலி!

நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் 13 தொழிலாளிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மான் மாவட்டம் ஒட்டிங் கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர்.

அத்துடன், நக்சல்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டதில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர்.

இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் இது குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் , மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர் நெப்பியூ ரியோ கூறியுள்ளார்.

சம்பவத்திற்கு வருத்தமடைவதாகவும், உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.

“நாகாலாந்தின் ஓட்டிங்கில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனையடைந்தேன், திங்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட எஸ்ஐடி இந்த சம்பவத்தை முழுமையாக விசாரிக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாய்க்கு புலி வேஷம்: மர்ம நபர்களை தேடும் போலீஸார்

Pagetamil

அதிக நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய 48 வயது காதலியை கொன்ற 28 வயது இன்ஸ்டா காதலன்!

Pagetamil

நடு வீதியில் ஆம்லெட் போட்டவர்களால் பரபரப்பு!

Pagetamil

காங்கிரஸில் இணைகிறார் மன்சூர் அலிகான்

Pagetamil

தமிழ் அரசு கட்சி வழக்கு மே 31 வரை ஒத்திவைப்பு: நீதிமன்றத்துக்குள் பல்டியடித்த சுமந்திரன் அணியினர்; மற்றொருவருக்கு பிடியாணை!

Pagetamil

Leave a Comment