25.6 C
Jaffna
December 28, 2024
Pagetamil
கிழக்கு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: அரியநேத்திரனிற்கு அழைப்பாணை!

கடந்த வருடம் 2021, பெப்ரவரி 4,ம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டமைக்கு எதிராக பொத்துவில் பொலிசார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக பொத்துவில் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுளனர்.

எதிர்வரும் டிசம்பர் 17,ம் திகதி காலை 9, மணிக்கு பொத்துவில் நீதிமன்றில் சமூகம் தருமாறு இன்று கொக்கட்டிச்சோலை பொலிசாரும், பொத்துவில் பொலிசாரும் அரியநேத்திரனின் இல்லத்திற்கு சென்று நீதிமன்ற கட்டளையை கையளித்தனர்.

இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணிக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு மேல்முறையீட்டு்நீதிமன்றில் சமர்பித்தவழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை கடந்த எப்ரல் மாதம் கல்முனையில் தாக்கல் செய்த வழக்கில் வாதாடிய சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முற்றாக இடைநிறுத்தி கல்முனை நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் I.N. ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற தடையுத்தரவினை மீறியதாக தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடத்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ஆம் திகதி வரை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையிலேயே இந்த வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு மீளப்பெறப்படுமா என நீதவான் மனுதாரர்களான பொலிஸாரிடம் இதன்போது வினவியிருந்தார். எனினும், உயர்மட்டத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என மனுதாரர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பத்து மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் இருந்து அரியநேத்திரனுக்கு அழைப்பானை்வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றம்

east tamil

அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானின் கல்முனை வருகை

east tamil

கல்முனை வைத்தியசாலைக்கு ஆதம்பாவா திடீர் விஜயம்

east tamil

தருமை ஆதீனம் திருக்கோணேஸ்வரத்திற்கு வருகை

east tamil

கிழக்கு மாகாண சபையின் புதிய நியமனங்கள்

east tamil

Leave a Comment