30.7 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

ஒரு கதிரை… இரண்டு ஆணையாளர்கள்: மட்டக்களப்பு மாநகரசபையில் குழப்பம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்கு இரண்டு ஆணையாளர்கள் செயற்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையில் ஏற்கனவே 2020, டிசம்பர்,07, ம் திகதி தொடக்கம் தயாபரன் கடமை புரியும் நிலையில் நேற்று தொடக்கம் மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நடராஜா சிவலிங்கம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதாயகம்பத்தினால் 30ஆம் திகதி நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜா சிவலிங்கம் நேற்று  வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு சென்று தனது கடமையினை ஆரம்பித்தார்.
இலங்கை நிருவாக சேவை (தரம் -1 ) உத்தியோகத்தரான இவர் உலக வங்கி திட்டத்திலும் , பின்னர் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின்  பிரதி ஆணையாளராகவும்  பணியாற்றியுள்ளார்.

ஆனால் ஏற்கனவே ஆணையாளராக இருந்த தயாபாரன் தமது கடமையை புதிய ஆணையாளர் சிவலிங்கத்துக்கு பாரம் கொடுக்காமல் அடம்பிடித்துள்ளார்.

புதிய ஆணையாளர் சிவலிங்கம் தமக்கு அலுவலகத்தில் இருக்கை இல்லாதமையால் மாநகர முதல்வர் சரவணபவானின் அறையில் ஓய்வெடுக்கிறார்.

புதிய ஆணையாளர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட முடியாமல் அவதியுறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment