யாழில் 6 நாளில் கரையொதுங்கிய 6 வது மர்ம சடலம்!

Date:

வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் இன்று மாலை உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

கடந்த மாதம் நவம்பர் 27ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டு கரையோரங்களில் ஒதுங்கிய 6வது சடலம் இது.

நவம்பர் 27ஆம் திகதி வடமராட்சி கிழக்கு மணல்காட்டிலும், வல்வெட்டித்துறை பகுதியில் சடலங்கள் கரைஒதுங்கியிருந்தன. 29ஆம் திகதி ஊர்காவற்துறையிலும், 30ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தன,

இந்நிலையில் இன்றைய தினம் வடமராட்சி சக்கோட்டைப்பகுதியில் பிற்பகல் 2:30 மணியளவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாயிலும் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 6 நாட்களில் குடாநாட்டு கரையோரங்களில் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்