மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பல வெடிமருந்துகள் குறித்து பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தனர்.
நேற்று மாலை கொள்ளுப்பிட்டியில் குற்றவியல் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட பின்னர், அசாத் சாலியின் பென்ஸ் கார் சோதனையிடப்பட்டபோது, கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த துப்பாக்கி உரிமம் பெற்று வைத்திருந்ததாக அசாத் சாலி குறிப்பிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.



