இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (17) யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த போராட்டம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து காலை 10 மணிக்கு காரணமாகிறது.
அங்கிருந்து பேரணி நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி செல்லவுள்ளது. அங்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தை பேரணி சென்றடைந்து, பிரகடனம் வெளியிடப்படும்.
இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து கொள்ளும்படி, கிழக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த பேரணி தமிழ் பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக காண்பிக்கப்படும்.
இந்த இணைப்பை அழுத்தி, தமிழ்பக்கத்தை லைக் செய்து, நேரலையை காணலாம்.