24.8 C
Jaffna
January 27, 2025
Pagetamil
மலையகம்

5வது மாடி யன்னலால் தவறி விழுந்தவர் உயிரிழப்பு!

நுவரெலியாவில் சுற்றுலா விடுதி ஒன்றில் ஊழியர்கள் தங்கியிருந்த ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (29) அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த (47) இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரங்க பியதர்ஷன ஹெட்டியாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேற்படி சுற்றுலா விடுதியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் தங்கியிருந்த ஐந்தாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியே தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

Leave a Comment