வவுனியா, குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் மணவாளக் கோல சங்காபிசேகம் சிறப்பாக நேற்று (21) இடம்பெற்றது.
வவுனியா, குட்செட் வீதியில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கருமாரி அம்மனின் கும்பாவிசேக தினத்தை முன்னிட்டு மணவாளக் கோல சங்காபிசேகத்தின் போது 1008 சங்குகள் வைத்து விசேட அபிடேக ஆராதைகளுடன் பூஜை வழிபாடுகள் ஆலயப் பிரதம குரு பிரபாகரக்குருக்கள் தலைமையில் அந்தண சிவாச்சாரியார்களுடன் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது மங்கள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகம் மற்றும் வழிபாடுகள் இடம்பெற்று பக்த அடியார்களின் அரோகரோ கோசத்திற்கு மத்தியில் மணவாளக் கோலத்தில் கருமாரி அம்மன் உள் வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். சுகாதார நடைமுறைக் பின்பற்றி ஆலய பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு கருமாரி அம்மனின் அருட் கடாற்சத்தினைப் பெற்றுக் கொண்டனர்.