27 C
Jaffna
December 30, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

மாவீரர்நாள் தடையில் எம்மால் தலையிட முடியாது; விளக்கீட்டு குழப்பத்தை ஆராய்வோம்: ஞானசாரர்!

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினவுகூர விதிக்கப்பட்ட தடையுத்தரவுகளில் நாம் தலையிட முடியாது. இந்த செயலணி ஏன் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். கார்த்திகை விளக்கீட்டில் படையினர் தலையீடு செய்தது பற்றி நாம் கவனம் செலுத்துவோம் என, ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (21) ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியினர் கலந்துரையாடல் நடத்தினர். இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே, இதனை தெரிவித்தார்.

தமிழர்களிற்கும், சிங்களவர்களிற்கும் ஒரேவிதமான பிரச்சனையிருப்பதால், செயலணியில் ஆரம்பத்தில் தமிழர்களை இணைப்பது பற்றிய பிரச்சனை எழவில்லையென்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களிற்கும், சிங்களவர்களிற்கும் பிரச்சனை ஒன்றாக இருந்ததால் ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்ட போது, அதில் தமிழர்களை இணைப்பதா இல்லையா என்பது பிரச்சனையாக இருக்கவில்லை. பொதுவாகவே தமிழர்களிற்கும், சிங்களவர்களிற்கும் ஒரே பிரச்சனையிருப்பதை நாம் அறிவோம். அந்த சூழலில் முஸ்லிம்களை தெரிவு செய்ய வேண்டிய சூழல் இருந்தது.

இந்த நாட்டில் தமிழ், சிங்கள மக்களை விட, முஸ்லிங்களிற்கு பலவிதமான சட்டங்கள் இருந்தன. அந்த சட்டங்களை ஒரு பொதுசட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, அவர்களின் பிரதிநிதித்துவம் தேவைப்பட்டது.

நாங்கள் ஒவ்வொரு இனக்குழுக்களின் பிரதிநிதிகளை சேர்க்கின்ற போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கண்ணாடிகளை கொண்டு பார்ப்பார்கள். இதனால் பிரச்சனைகள் கூடுமே தவிர, குறையாது.

ஆனால் ஒரே பிரச்சனையிருந்ததால் தமிழர்களை போட வேண்டிய கேள்வி எழவில்லை.

தமிழர்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.  அவர்கள் என்ன செய்கிறார்கள்?

நாட்டில் பிரதேசரீதியாக பல சட்டங்கள் உள்ளன. தேசவழமை சட்டத்தில் உள்ள நல்லவையையும், முஸ்லிம் சட்டத்தில் உள்ள நல்லவையையும், கண்டிய சட்டத்தில் உள்ள நல்லவையையும் பெற வேண்டும். எல்லா பிரதேசங்களிலுமள்ள நல்லவையை ஒன்று சேர்த்து, ஒரு பொதுசட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

இதன்போது செய்தியாளர் ஒருவர்- தெற்கில் ஜேவிபியினர் தனது அமைப்பிலிருந்து இறந்தவர்களை நினைவகூர தடையில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியாதுள்ளது. நீதிமன்றம் ஊடாகவும், படையினரும் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். என் இந்த இரட்டை நிலைமை?- என கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஞானசாரர்- கடந்த 19ஆம் திகதி கார்த்திகை தீப விளக்கீட்டில் படையினர் தலையீடு செய்ததை நாங்கள் அறிகிறோம். அது பற்றிய தகவல்களை பெற்றுள்ளோம் என்றார்.

செய்தியாளர் ஒருவர்- யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர மே 18 அன்று தடைவிதிக்கப்படுவது பற்றி கேள்வியெழுப்பினார்.

நீங்கள் கேட்பது சட்டரீதியான நீதிமன்றம் தொடர்பான பிரச்சனை. கார்த்திகை விளக்கீட்டில் ஏற்பட்ட குழப்பம் பற்றி நாங்கள் ஆராய்வோம். சட்டரீதியான விடயங்களில் நாம் தலையிட முடியாது.

முதலாவது இந்த செயலணி ஏன் அமைக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது சம்பந்தமான விடயங்களைதான் நாம் கையாள வேண்டும். அது பற்றி கேளுங்கள்.

இரண்டு தசாப்தங்களின் முன்னர் ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் நாய்களை கொன்று தின்றார்கள். அவர்கள் ஒன்றுபட்டதால் இன்று முன்னேறி விட்டார்கள். நாமும் ஒன்றுபட்டு, சுயஉற்பத்தியை பெருக்கி, வளமான நாட்டை உருவாக்குவோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment