26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா

கமல், சீமான், தினகரன்: சொத்து மதிப்பு எவ்வளவு?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள, சொத்து விபரங்கள் வருமாறு.

கமல்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவர் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு: சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசிக்கிறேன். எட்டாம் வகுப்பு படித்திருக்கிறேன். என் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கையிருப்பு, வங்கிகள் டிபாசிட் என, மொத்தம், 2,43,84,563 ரூபாய் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

பங்குகள் மற்றும் முதலீட்டுப் பத்திரங்களாக, 26.11 கோடி, போஸ்டல், இன்சூரன்ஸ் பாலிசி உள்ளிட்ட வகையில், 2.40 கோடி, தனி நபர் கடன், அட்வான்ஸ், அறக்கட்டளை உள்ளிட்டவற்றில், 36.25 கோடி ரூபாய் இருப்பு இருக்கிறது என்றும் அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு, 45.09 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்துகள் பட்டியலில், கொடைக்கானல், விளாப்பட்டி கிராமத்தில், 35.59 ஏக்கர் விவசாய நிலம், மதிப்பு 17.80 கோடி. ஆழ்வார்பேட்டையில் மூன்று பிளாட், மதிப்பு 2.50 கோடி ரூபாய், ரங்கநாதன் அவென்யூ பிளாட், 17 கோடி என, மொத்தம், 19.50 கோடி ரூபாய் மதிப்புக்குச் சொத்து; லண்டனில், டவர் பிரிட்ஜ் ரோட்டில், 2.50 கோடி மதிப்புக்கு, 500 சதுர அடி கட்டடம், இணை சொத்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டில், 10,914 சதுரடி இடத்தில், 9,002 சதுரடியில் உள்ள கட்டடத்தின் மதிப்பு, 24.84 கோடி. டி.டி.கே., ரோட்டில், 23 ஆயிரம் சதுரடிக்கு உள்ள கட்டடத்தின் மதிப்பு, 45.18 கோடி.சென்னை, உத்தண்டி கிராமத்தில், 6,382 சதுரடிக்கு ஒரு பிளாட், மதிப்பு, 3.05 கோடி. சோழிங்கநல்லுார், எல்காட் அவென்யூவில், 17,040 சதுரடியில் கட்டடத்தின் மதிப்பு, 19 கோடி என, மொத்தம், 92.05 கோடி இருக்கிறது என தனது அஃபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அசையா சொத்தின் மதிப்பு – ரூ. 131,84,45,000. அசையும் சொத்து மதிப்பு – 45 கோடியே, 9 லட்சத்து, ஆயிரத்து, 476 ரூபாய் என, மொத்தம் – 176,93,46,476 ரூபாய். கடன் தொகை – 49,50,11,010 ரூபாய்.

வீட்டு கடன், அடமான கடன், இன்சூரன்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் உள்ள கடன், 33.16 கோடி, தனியாருக்குக் கொடுக்க வேண்டியது, 15.33 கோடி உட்பட மொத்தமுள்ள கடன், 49.50 கோடி என பட்டியலிட்டுள்ளார்

சீமான்

திருவொற்றியூா் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த நிதியாண்டில் பெறப்பட்டுள்ள ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே என வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2019-20ஆம் ஆண்டு மொத்த வருமானம் ரூ.1,000 மட்டுமே எனவும், தனது மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம். ரொக்கப் பணம், காா், தங்க நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31 லட்சம். மனைவியின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 63 லட்சம் எனவும் இதில் 200 சவரன் தங்க நகைகளின் மதிப்பும் அடங்கும். தனக்கு வீடு, நிலங்கள் உள்ளிட்ட அசையாத சொத்து ஏதும் இல்லை என சீமான் உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

சீமான் தனது மனைவிக்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் வீடும், நிலங்களும் உள்ளன என்றும் ரூ. 6 லட்சம்வரை வங்கிகளில் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்மீது 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் அவர் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். 2017 இடைத் தேர்தலில் ஆர்.கே நகரில் போட்டியிட்டு வென்ற அவர், இரண்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறார். தன் வேட்புமனுவில், தன்னிடம் கையிருப்பாக வெறும் 2,890 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் தினகரன்.

கிட்டத்தட்ட 10 வங்கிக் கணக்குகள் வைத்திருக்கும் அவர், தன் பெயரில் இருக்கும் அசையும் சொத்தக்களின் மதிப்பாகக் குறிப்பிட்டிருப்பது 19,19,485 ரூபாய் மட்டுமே. ஆனால், அவர் மனைவியின் பெயரில் 7.66 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருக்கின்றன. அடையாரில் இருக்கும் இவர்களின் வீட்டின் ஒரு பாதிக்குத் தினகரனும், மற்றொரு பாதிக்கு அவர் மனைவியும் உரிமையாளர்களாக இருக்கின்றன. அந்த வீட்டின் மொத்த மதிப்பு சுமார் 1.15 கோடி ரூபாய். இதன் பாதி மதிப்பான 57.44 லட்ச ரூபாய் மட்டுமே தினகரன் பெயரில் இருக்கும் அசையாச் சொத்துகளின் மதிப்பு. அதுமட்டுமல்லாமல் 1.75 கோடி ரூபாய் மதிப்பிலாம தோப்பு வீடு அவர் மனைவியின் பெயரில் திண்டிவனத்தில் இருக்கிறது. தனக்கு 14 லட்சம் கடன் இருப்பதாகவும் தன் வேட்புமனுவில் கூறியிருக்கிறார் தினகரன்.

ராஜேந்திர பாலாஜி

கடந்த சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்தத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். தன்னிடம் சுமார் 43 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக தன் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் கையிருப்பு மட்டும் நாலரை லட்ச ரூபாய். அவர் பெயரில் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், அவர் அம்மாவின் பெயரில் 5.7 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் இருப்பதாக அதில் சொல்லியிருக்கிறார்.

இவரது அசையா சொத்துக்களின் மதிப்பு 2,66,20,500 ரூபாய். விருதுநகர் மாவட்டம் தெற்கு தேவதானம் கிராமத்தில், 7 இடங்களில் விவசாய நிலங்கள் வைத்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி, அவற்றின் மொத்த மதிப்பு, தோராயமாக 81.6 லட்சம் ரூபாய். விவசாய நிலம் அல்லாமல், 22 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலங்களும் இவர் பெயரில் இருக்கிறது. அதேபோல், திருத்தரங்கம் கிராமத்தில் இருக்கும் அவர்களின் வீட்டின் மதிப்பு ஒரு கோடியே 63 லட்சமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment