Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பிற்கு அபின் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

அபின் போதைப்பொருளை கடத்திய குடும்பஸ்தரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய ஞாயிற்றுக்கிழமை(15) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பொலனறுவை மாவட்டம் கதுருவெல பகுதியில் இருந்து அரச பேரூந்தில் அபின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமையவே காத்தான்குடி டெலிகொம் சந்தியில் வைத்து இச்சந்தேக நபர் கைதானார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கதுருவெல பகுதியை சேர்ந்தவர். 50 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம் அடங்கிய அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டன.

மேலும் கைதான சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!