இன்னும் 30 ரன்கள்: புதிய மைல்கல்லை நெருங்கும் டேவிட் வோர்னர்

Date:

ரி20 உலகக் கோப்பையில் விளையாடிவரும் அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வோர்னர் இன்னும் 30 ரன்கள் சேர்த்தால் மிகப்பெரிய மைல்கல்லை எட்டுவார்.

ரி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று துபாயில் நடக்கிறது. கோப்பையை வெல்வதற்கான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை எதிர்த்து நியூஸிலாந்து அணி மோதுகிறது. இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால், ஆட்டத்தில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரி20 உலகக் கோப்பைப் போட்டியில் மட்டும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் 6 இன்னி்ங்ஸ்களில் ஆடி 236 ரன்கள், சராசரியாக 59.50 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 30 ரன்கள் சேர்த்தால், அவுஸ்திரேலியாவின் இரு ஜாம்பவான்கள் சாதனையை வோர்னர் முறியடிப்பார்.

முன்னாள் வீரர்கள் மத்யூ ஹைடன், ஷேன் வாட்ஸன் இருவரும் ரி20 போட்டியில் ஒரே உலகக் கோப்பையில் தங்கள் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்துள்ளனர். மத்யூ ஹேடன் 2007 உலகக் கோப்பையில் 6 இன்னிங்ஸில் 265 ரன்கள் சேர்த்துள்ளார்.

2012ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் வாட்ஸன் 249 ரன்கள் சேர்த்துள்ளார். வாட்ஸன், ஹைடனின் சாதனையை முறியடிக்க வோர்னருக்கு 30 ரன்களும் தேவைப்படுகிறது. வோர்னர் 30 ரன்களை எட்டவிட்டால், ஒரு உலகக் கோப்பையில் அவுஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

ரி20 போட்டிகளில் அதிகமான ரன்களை அடித்தவர்கள் வரிசையில் வோர்னர் தற்போது 6வது இடத்தில் உள்ளார். வோர்னர் தற்போது 87 இன்னிங்ஸ்களில் 2501 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 14 ரன்களை வோர்னர் சேர்த்தால், பாகிஸ்தான் கப்டன் பாபர் ஆஸமின் 2,507, முகமது ஹபீஸின் 2,514 ரன்கள் சாதனையை வோர்னர் முறியடிப்பார்.

ஐபிஎல் ரி20 தொடரில் வோர்னர் பேட்டிங் ஃபோர்மில் இல்லை எனக் கூறி சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் 2வது சுற்று தொடரில் களமிறக்காமல் பெஞ்சில் அமரவைத்தது. ஏறக்குறைய அந்த அணியிலிருந்து  வோர்னரை நீக்கும் அளவுக்குச் சென்றது. ஆனால், தற்போது ரி20 உலகக் கோப்பையில் ரன் குவிப்பில் முன்னணி பேட்ஸ்மேனாக வோர்னர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்