இன்றைய வானிலை

Date:

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழை பெய்யும்
மன்னார் – அடிக்கடி மழை பெய்யும்
மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கண்டி – அவ்வப்போது மழை பெய்யும்
நுவரெலியா – அவ்வப்போது மழை பெய்யும்
இரத்தினபுரி – அடிக்கடி மழை பெய்யும்
அனுராதபுரம் – அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்
கொழும்பு – அவ்வப்போது மழை பெய்யும்
காலி – அடிக்கடி மழை பெய்யும்

-வளிமண்டலவியல் திணைக்களம்-

spot_imgspot_img

More like this
Related

அனோஜனுக்கா ஜனாதிபதியிடமும், சவூதி மன்னருக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மனு

அனோஜனுக்கா ஜனாதிபதியிடமும், சவூதி மன்னருக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மனு அவமதிப்பான கருத்து ஒன்றை...

விசாரணைக்கு டிமிக்கி விடும் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப்...

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்