தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கருதப்படும் 35 வயதுடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் தம்புள்ளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
தனது மகளிற்கு பாடம் கற்பிக்கவென 14 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற நபர் தலைமறைவாகியுள்ளார். சிறுமியின் உடல் நிர்வாணமான நிலையில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
OIC தம்புள்ளை பொலிஸ் நிலையம் – 071-8591091
OIC குற்றப்பிரிவு – 071-8593103




