SpaceX விண்கலத்தின் கழிப்பறையில் கசிவு ஏற்பட்டுள்ளதால், அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து இன்று பூமிக்குப் புறப்படும் விண்வெளி வீரர்கள், அணையாடை (diaper) அணியும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த விண்கலத்தில், 4 விண்வெளி வீரர்கள் 20 மணி நேரம் பயணம் செய்வர்.
‘விண்வெளிப் பயணம் சிறுசிறு சவால்கள் நிறைந்தது தான். அதில் இதுவும் ஒன்று’ என்று அவர்களில் ஒருவரான மேகன் மெக்ஆர்தர் கூறினார்.
அதனால், கழிப்பறைக் கசிவைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்றார் அவர்.
அந்த நால்வரும் ஏப்ரல் மாதம் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அவர்கள் நிலையத்தின் சில மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு அமெரிக்கரும் இரு ரஷ்யர்களும் நிலையத்தில் இருப்பர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1