திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சமூகத்தின் ஊடக இல்லம் திருகோணமலையில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது
இன்று (06) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சமூகத்தின் தவிசாளர் மங்கலநாத் லியனாராச்சி அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள அவர்களினால் மத அனுஷ்டானங்களுடன் திறந்து வைக்கப்பட்டது
இவ் ஊடக இல்லம் திருகோணமலை நகரின் மத்தியில் பிரதான பேருந்து நிலைய கட்டிட தொகுதியில் திறந்துவைக்கப்பட்டது இவ் ஊடக இல்லத்தினை திறந்து வைத்து அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள இதன்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் முக்கியமானது மேலும் நாட்டில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் மக்களின் கீழ்மட்ட பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களுக்கான இவ் ஊடக இல்லத்தினை திறந்து வைப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்
சில ஊடகவியலாளர்கள்,ஊடகங்கள் இருக்கின்றன சமூகத்திற்கு உண்மை நிலவரத்தை சரியான முறையில் கொண்டு செல்வதில்லை அந்த வகையில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை எடுத்துக்கொண்டால் ஏதேனும் குறைபாடுகள் அல்லது முறைப்பாடுகளை சமூகத்திற்கு உரிய முறையில் கொண்டு செல்ல வேண்டுமாயின் சிலவேளைகளில் எங்களையும் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டதா என்ன தீர விசாரித்து செவ்வனே தமது ஊடக தர்மத்தினை நிலைநாட்டுவதை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது
அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கின்றது இந்த ஊடக இல்லத்தை பார்க்கும்போது அவ்வாறான சில உபகரண குறைபாடுகள் இருப்பதை அவதானிக்க முடிந்தது அதனடிப்படையில் ஆரம்ப கட்டமாக இந்த திருகோணமலை மாவட்ட ஊடக இல்லத்திற்கு கணினி வசதி மற்றும் இணைய வசதியினை பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் திருகோணமலை மாவட்ட ஊடக இல்லத்திற்கான சிறிய அளவிலான சொந்த நிலத்தினையும், சொந்த இல்லறமற்ற ஊடக வியலாளர்களுக்கான நிலப்பிரச்சினையினையும் தீர்த்து வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றிணையும் முன்னெடுத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தெரிவித்தார்
மேலும் இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் உத்தியோகபூர்வ டி-ஷர்ட்டுகளும் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டது
மேலும் இவ் ஊடக இல்ல விழாவில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள, திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு அமைப்பின் அங்கத்தவர்கள் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சமூகத்தின் தவிசாளர் மங்கலநாத் லியனாராச்சி, செயலாளர் ஏ,ஜே.எம்,சாலி பொருளாளர் சி,சசிகுமார் மற்றும் ஊடக சமூகத்தின் ஊடகவியலாளர்கள் சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.