25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

திருகோணமலை விபத்தில் ஒருவர் பலி: பதற வைக்கும் காட்சிகள்!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட திருகோணமலை புல்மோட்டை என்.சீ வீதி முருகாபுரி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

இவ்விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை சாம்பல்தீவு பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்ட தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான என்.பிரபாகரன் (58) என திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது நேற்று இரவு முருகாபுரி பிரத்தேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு செல்வதற்காக பிரதான வீதியினை கடக்க முற்பட்ட வேளையில் பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த நடமாடும் வெதுப்பாக முச்சக்கர வண்டி மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து தொடர்பில் சி.சி.டீ.வி காணொளி பெறப்பட்டுள்ளபட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment