மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி, புதுச்சேரியில் ரஜினி ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூன்றாவது நாளாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி புதுச்சேரியில் ரஜினி ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர்.
மறைமலை அடிகள் சாலையில் உள்ள அம்மன் கோயிலில் ரஜினிகாந்த் படம் வைத்து, “எங்கள் சாமியே மீண்டு வா” எனக் குறிப்பிட்டு பேனர் வைத்து அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி ரசிகர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1