27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

காதல் மனைவியை மீட்டுத் தாருங்கள்: வவுனியாவில் 200 அடி கோபுரத்தில் ஏறி காதலன் போராட்டம்; ஏ9 வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம்! (VIDEO)

வவுனியா தேக்கவத்தை பகுதியில் 200 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தான் காதலித்த பெண்ணை பதிவு திருமணம் செய்த நிலையில், யுவதியின் பெற்றோர் அவரை கடத்தில் சென்று விட்டதாகவும், காதல் மனைவியை மீட்டுத்தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளார்.

தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான உபாலி வீரசேகரகே நிசாந்த வீரசேகர என்ற  இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த 18 வயதான சதுஜா என்பவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு ஏற்றிச் சென்றனர்.

தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் குறித்த இளைஞர் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன்,கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்திருந்தனர். எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் பொலிசாருடன் முரண்பட்டதுடன் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

காதலியை அழைத்து வருவதாக தீயணைப்பு துறையினர் கூறியதையடுத்து கீழே இறங்கிய இளைஞன், பின்னர் மீண்டும் ஏறிக் கொண்டு விட்டார். 200 அடி உயரத்தில் அவர் ஏறி நிற்கிறார்.

இளைஞனிற்கு துணையாக மைத்துனனும் கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் கீழே இறக்கப்பட்டார்.

காதலனை மீட்பதற்காக மற்றும் இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியநிலையில் அவர்களது முயற்சியும் பலனிளிக்கவில்லை.

பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென கூறி, காதலனின் உறவினர்கள் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த செய்தி பிரசுரமாகும் நேரத்திலும் வீதி மறிக்கப்பட்டுள்ளது. காதலன் 200 அடி உயரத்தில் இருக்கிறார்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதர்கள் – பிரதமர் சந்திப்பு

east tamil

கலென்பிந்துனுவெவ புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு

east tamil

உணவு விஷமானதால் டிக்கோயாவில் 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

கொழும்பு-பசறை பேருந்து விபத்து – 13 பேர் காயம்

east tamil

16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணை!

Pagetamil

Leave a Comment