இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் மீனவர் போராட்டம் இடம்பெறவுள்ளது.
தமது பகுதி இழுவை மடி மீன்பிடி தொழிலுக்கு தடை விதிக்கக் கோருவதை எதிர்த்தும், ஒவ்வொரு இழுவைமடி மீன்பிடி படகும் மாதாந்தம் யாருக்கோ 5000 ரூபா கப்பம் செலுத்துகிறார்கள் என தெரிவித்தமைக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
ஏற்கனவே சுமந்திரன் அணியினர் முல்லைத்தீவிலிருந்த யாழ்ப்பாணத்திற்கு நடத்திய படகுச்சவாரியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் பிரதான எந்த மீனவர் அமைப்புக்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால் எரிபொருள் செலவு என்ற பெயரில் பணம் செலுத்தப்பட்டே பல படகுகள் இதில் இணைக்கப்பட்டன.
இன்று நடக்கும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்தின் பிரதான மீனவர் அமைப்புக்கள் ஆதரவளிப்பதாக அறிய முடிகிறது.
போராட்டம் தொடர்பில் சில மீனவர் அமைப்புக்களின் பிரமுகர்களை நேற்று தமிழ்பக்கம் வினவியபோது, குருநகர் மீனவர்களினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்படுவதாகவம், தாம் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இன்று எம்.ஏ.சுமந்திரனின் உருவப்பொம்மையும் தீயிலிடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.