26.7 C
Jaffna
January 5, 2025
Pagetamil
விளையாட்டு

உலகக்கிண்ணம் சூப்பர்12 சுற்றிற்கு முன்னேறாத விரக்தியில் நெதர்லாந்து வீரர் ஓய்வு!

ரி20 உலக்கிண்ணம் சூப்பர்-12 சுற்றுக்கு தனது நாடு தகுதி பெறாததால் வருத்தமடைந்த நெதர்லாந்து வீரர் ரையன் டென் டஸ்ஜெட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்றுப்போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதனை தொடர்ந்து சூப்பர்-12 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது.

உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால், சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

தனது நாடு சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறாததால் வருத்தமடைந்த நெதர்லாந்து அணியின் சகலதுறைவீரர் ரையன் டென் டஸ்ஜெட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

ரையன் 2006 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்  119 ஓட்டங்கள் குவித்தார். அதேபோல், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 106 ஓட்டங்கள் குவித்தார்.

ரையன் டென் டெஸ்ஜெட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1,541 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

Leave a Comment