ஊரகஸ்மங்ஹந்தியவில் கொரகீன பகுதியில் சட்டபூர்வமற்ற தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த ஆணொருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நில்மினி (36) என்பவரே கொல்லப்பட்டார். நிஹால் (39) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இருவர் கடந்த 6 வருடங்களாக திருமணம் முடிக்காது ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். முதலாவது கணவனை கைவிட்ட நில்மினி, தற்போது நிஹாலுடன் வாழ்ந்து வருகிறார். நிஹாலும் மனைவியை பிரிந்தவர்.
கடந்த 20 ஆம் திகதி இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது.
நில்மினி அதிகமாக தொலைபேசியில் பேசுவதாலேயே இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதால், நிஹால் சந்தேகமடைந்திருந்தார்.
கம்பியொன்றினால் நில்மினியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது சடலத்திற்கு அருகில் பூங்கொத்து ஒன்றை வைத்துள்ளார்.
பின்னர், வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சகோதரி ஒருவர் நேற்று அவருக்கு தொலைப்பேசி அழைப்பு ஏற்படுத்தியுள்ளார். எனினும், பதில் கிடைக்காத நிலையில், பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.
அதன்படி, பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்ட போது இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.