27 C
Jaffna
December 23, 2024
Pagetamil
குற்றம்

உறங்கிக் கொண்டிருந்த இளைஞனை இரும்புக்கம்பியால் தாக்கி வீதியால் இழுத்துச் சென்ற கொடூரம்: பருத்தித்துறையில் சம்பவம்! (CCTV)

யாழ். பருத்துறை – சுப்பர்மடம் பகுதியில் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிய இளைஞனை இரும்பு கம்பிகளால் தாக்கியதுடன் காலில் பிடித்து வீதியால் இழுத்து சென்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் நேற்று பிற்பகல் 03மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞன் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிக் கொண்டிருந்தார்.

அங்குவந்த 3 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பிகளால் மூர்க்கத்தனமாக தாக்கியதுடன் மயங்கி கிடந்த இளைஞனின் காலை பிடித்து வீதியால் இழுத்து சென்றுள்ளனர்.

முன் பகையின் காரணமாகவே இந்த கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் கை மற்றும் கால்கள் முறிந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

வசமாக சிக்கிய ஜோடி!

Pagetamil

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

Leave a Comment