இது நொண்டி அரசு; 2015 இல் முடியாதென ஓடியவர்களே இன்றுள்ளனர்: வேலுகுமார் எம்.பி!

Date:

“முடியாது எனக்கூறிவிட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆள முடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்ணணியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“இந்த அரசாங்கம் நொண்டி அரசாங்கம். நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாமல், கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் 2015 இல் முன்கூட்டியே தேர்தலை நடத்திவிட்டு நாட்டைவிட்டு ஓடிய அரசாங்கம். அன்று இருந்த நிலைமைதான் இன்றும் இருக்கின்றது.

அப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் இன்று நிதி அமைச்சர். அன்று ஜனாதிபதியாக இருந்தவர் இன்று பிரதமர். எனவே, இவர்களுக்கு நாட்டை நிர்வகிக்க முடியாது. அதானால்தான் நாட்டு மக்கள் மீது சுமைகளை திணிக்கின்றனர்.

இன்று எமது தோட்டத்திலுள்ள தாய்மார் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சிறை சோறு திண்ணும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு முதுகெலும்பில்லை. எமது தாய்மாருக்காக போராடுவோம்.” என்றார்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

யானைகள் வழிமறித்ததால் வைத்தியசாலை கொண்டுசெல்ல தாமதம்: பாம்பு தீண்டிய யுவதி மரணம்!

பாம்பு தீண்டிய யுவதியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, யானைகள் இடைமறித்ததால்...

இலங்கையில் நிலநடுக்க அபாயம்? மத்திய மலைநாடு தொடர்பில் பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இத்தகைய புவியியல் மாற்றங்கள் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுவதாகவும்...

சிறுமிக்கு இழைத்த கொடுமைக்காக உதவி ஆய்வாளருக்கு 50 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்