சீனி இறக்குமதி மோசடிக்கு எதிராக ஜே.வி.பி அடிப்படை உரிமை மனு!

Date:

சீனி இறக்குமதியில் 15.9 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு, ஜே.வி.பியினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல் செய்யப்படுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியின் சார்பில், சட்டத்தரணி சுனில் வட்டகலவினால் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நுசாத் பெரேரா, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் சாந்த திசநாயக்க, சட்டமா அதிபர், தனியார் நிறுவனமொன்றின் தலைவர் ஆகியோருக்கு எதிராக மனு தாக்கல் செய்ய்படவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக குறைத்த தீர்மானம் காரணமாக, அரசுக்கு கிடைக்கவேண்டிய 15.9 பில்லியன் ரூபா இல்லாமல் போயுள்ளதாக நிதியமைச்சினால் நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி, மனுதாக்கல் செய்யவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்