திருகோணமலை- காந்திநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் போன்றவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு இன்று (12) கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த விளக்கத்தை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 600 போதை மாத்திரைகள் மற்றும் 4250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அனுராதபுர சந்தி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.