கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு புதிய இயல்பு நிலையில் வாழ வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
நேற்று ஊடக சந்திப்பில் உரையாற்றிய மருத்துவர் விஜயமுனி இதனை தெரிவித்தார்.
பல பகுதிகளில் கண்காணிப்பு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டதாகவும், விற்பனையாளர்கள் முகக்கவசம் அணியாமல் அல்லது முகக்கவசத்தை கீழே இழுத்து விட்டபடி நின்றதை அவதானித்ததாக குறிப்பிட்டார்.
இது அபாயகரமான நிலைமை. தடுப்பூசி போடப்பட்ட போதிலும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது முக்கியம் என்றார்.
30 வயதிற்கு மேற்பட்ட 92% பேர் கொழும்பில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அதில் 68% பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1