Pagetamil
முக்கியச் செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (8) மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு, படகில் இருந்த குருநகர் மீனவர்கள், இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டே மீனவர் சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெறுகிறது.

கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதற்கு முன்பாக இன்று (8) காலை 9.45 மணியளவில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

எமது கடல் வளங்களை அழிக்காதே, இலங்கை அரசே இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து, எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வெளிநாட்டு மீனவர்களை அனுமதிக்காதே, இலங்கை அரசே உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்து, கடல் வளத்தை சுரண்டி எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே போன்ற பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்திற்கு பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் கொடுக்கப்பட்டது.

பின்னர் மீனவர்கள் குழு, ஸ்ரான்லி வீதியிலுள்ள, ஸ்ரீதர் தியேட்டரில் உள்ள ஈ.பி.டி.பியின் பிரதான வாயிலின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு, மகஜர் கையளித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

இலங்கையுடன் ஒத்துழைப்பை தொடர சீன ஜனாதிபதி உறுதி!

Pagetamil

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விபரம்

Pagetamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

Leave a Comment