Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு!

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மதிப்பு மிக்க விருதான நோபல் பரிசுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலுள்ள குழுவாலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலுள்ள கரோலின்ஸ்கா நிறுவன குழுவாலும் அறிவிக்கப்படுகின்றன.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி மருத்துவ உலகில் மாபெரும் பங்காற்றிய அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டம் படபூட்டியன் ஆகிய இருவருக்கு கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படவிருக்கிறது.

இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானின் சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மன், இத்தாலியின் ஜோர்ஜியோ பாரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதில் சியுகுரோ, ஹாசில்மனுக்கு காலநிலை மாற்றத்தின் இயற்பியல் மாதிரியாக்கம், அதன் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை சரியாக கணித்தல் ஆகியவற்றுக்கு நோபல் வழங்கப்படுகிறது.

சிறிய அணுவிலிருந்து பருப்பொருள்கள் வரையிலான இயற்பியல் அமைப்புகளில் ஏற்படும் சீர்குலைவு மற்றும் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிந்ததற்கு பார்சிக்கும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment