இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்ளே, வடக்கிற்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, வடக்ல் அரசியல் பிரமுகர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தில் இன்று நடக்கும் சிவராத்திரி விழாவில் இந்திய தூதர் கலந்து கொள்கிறார்.
இதன் பின்னர் வடக்கின் மாவட்டங்களில் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடுகிறார். தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தந்த மாவட்டங்களில் சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அரசியல் சந்திப்புக்களை கோபால் பாக்ளே மேற்கொள்கிறார்.
இதன் பின்னர் கிழக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இதன்போது திருகோணமலையில் இரா.சம்பந்தனையும் சந்திக்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1