10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற இருவரை முருங்கன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு பாரவூர்தியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனையிட்டபோது போதைப்பொருள் சிக்கியது.
பாரவூர்தியை பொலிசார் வழிமறித்த போது, அது நிற்காமல் தப்பிச் சென்றது. எனினும், அதனை பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.
வவுனியாவை சேர்ந்த்த 30 மற்றும் 42 வயதுடைய சந்தேக நபர்கள் கைதாகினர்.
அவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1