அத்தியாவசிய பொது சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து நாளை முதல் பொது சேவை மீண்டும் செயல்படும் என்று பொதுச் சேவைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.
நாளை- ஒக்டோபர் 1 ஆம் திகதி- அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களும் இன்று வெளியிடப்படும்.




