28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்!

மெல்பெர்ன் நகரம் உட்பட அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை 09:15 மணியளவில் விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று தொலைவில் உள்ள மான்ஸ்ஃபீல்டில் நிலநடுக்கம் நிகழ்ந்தது. சிட்னி, கான்பெரா மற்றும் டாஸ்மேனியா வரை நடுக்கம் உணரப்பட்டது.

10 கிமீ ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மான்ஸ்ஃபீல்ட் விக்டோரியன் ஆல்ப்ஸின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இது மெல்பெர்னுக்கு வடகிழக்கில் சுமார் 180 கிமீ தொலைவில் உள்ளது.

சில கட்டிடங்களிற்கு சேதமேற்பட்டுள்ளதை சமூக ஊடகங்களில் பதிவான காட்சிகள் புலப்படுத்தின  எனினும், காயங்கள் எதுவும் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் அண்டைய பிரதேசங்களான தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகியவற்றிலும் உணரப்பட்டது.

“நீங்கள் விக்டோரியாவில் இருந்தால், உங்களுக்கு ஆபத்து உள்ளது. நிலநடுக்கத்தை எதிர்பார்க்கலாம், சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் பிற ஆபத்துகளிலிருந்து விலகி இருங்கள். அவசரகாலத்தைத் தவிர, வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும், ”என்று மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.

சமூக ஊடகங்களில், மக்கள் மெல்பேர்னில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகளின் படங்களை வெளியிட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment