நடிகை அமலாபால் மது பாட்டிலுடன் நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால்.மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி போன்ற பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அமலாபால் தனது சமூக வலைத்தளமான இண்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில்,இண்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் மது பாட்டிலுடன் தன் நண்பர்களுடன் நடனம் ஆடுகிறார். அமலாபாலின் சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1