தேயிலை மற்றும் இரப்பர் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தி வர்ததமானி வெளியிடப்பட்டது.
தொழில் அமைச்சின் செயலாளரினால் இந்த வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின்படி, கடந்த 5ஆம் திகதி முதல் சம்பள உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
வேதன நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளாந்த கொடுப்பனவாக 900 ரூபாவும், பாதீட்டு கொடுப்பனவாக 100 ரூபாவும் சேர்த்து 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டுமென வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1