நாட்டின் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழப்பு எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்தவர்.
உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (09) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, கொவிட் தொற்று மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரபே பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (07) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர பக்கவாரம், கொவிட் தொற்று, உக்கிர நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (09) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் சிறுநீரக செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (08) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, புற்றுநோய் நிலை மற்றும் உக்கிர நீரிழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.




