25.1 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

யாழ் பல்கலை பட்டமளிப்பில் பதக்கங்கள், பரிசில்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அறிவித்தல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மற்றும் பேராசிரியர் க. குணரட்ணம் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ஆகிய தங்கப் பதக்கங்களுக்குத் தகுதி பெற்ற – அவற்றுக்காகத் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கும் மாணவர்களைத் தமது விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக கல்வி விவகாரங்கள் மற்றும் ஆய்வு, வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் கோரியுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மற்றும் பேராசிரியர் க. குணரட்ணம் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ஆகிய தங்கப் பதக்கங்களுக்கு மாணவர்களிடம் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

எனினும் கடந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறை காரணமாக தபால் மூலத் தொடர்பாடல்களில் மந்த நிலை ஏற்பட்டிருப்பதனால் தபால் மூலமாகத் தமது விண்ணப்பங்களை அனுப்பிய மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான அலுவலக நேரத்தினுள் நேரடியாக அல்லது 0212226500 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றமையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், விண்ணப்பத்தின் பிரதியை அல்லது தபால் மூலம் அனுப்பப்பட்டமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை araca@univ.jfn.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் யாழ். பல்கலைக்கழக கல்வி விவகாரங்கள் மற்றும் ஆய்வு, வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் கோரியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

Leave a Comment