அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனா தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி வடக்கில் இன்று (08) திருமண நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் மிருசுவிலைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து , நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர்.
அத்துடன், மணமகன், மணமகள் இருவருக்கும் அவர்களுடன் நெருக்கமான உறவினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார கட்டுப்பாடுகளை மீறி திருமண வைபவத்தை ஒழுங்கு செய்தவர்கள் மீது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யபட்டுள்ளது. அதனால் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் முற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அச்சுவேலி பொலிஸார் கூறினர்.