பிலிப்பைன்ஸிற்குள் நுழைவதற்கு 10 நாடுகள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை, அந்த நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) தளர்த்தியிருக்கிறார்.
ஏப்ரல் மாதத்திலிருந்து இலஙகை, இந்தியா, மலேசியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிலிப்பைன்ஸுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
டெல்டா பிறழ்வின் பரவலைத் தடுக்க, இன்னும் கூடுதலான நாடுகள் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
அந்தத் தடை நாளை மறுநாள் முதல் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஓமான், தாய்லந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து வருவோர், பிலிப்பைன்ஸில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1