25.5 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இலங்கை

ரிஷாத் பதியுதீனின் மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிக்கை நிராகரிப்பு!

சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மாமனார் கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (27) நிராகரித்தார்.

சந்தேக நபருக்கு கோவிட் தொற்று இருந்தால் அவருக்கு தேவையான சிகிச்சையை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான அலி இப்ராகிம் சைபு கிதார் முகமது சிஹாப்தீன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன முன்னிலையாக இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்தார்.

தனது வாடிக்கையாளருக்கு கோவிட் நோய்க்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாக கூறி பிணை வழங்க முடியாது என்றும், அவருக்கு சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.

பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், சந்தேக நபருக்கு தேவையான சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போக்குவரத்து விதிமீறல்: 383 சாரதிகள் மீது வழக்கு பதிவு

east tamil

‘மக்களுக்கு எதிராக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்’: அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Pagetamil

மஹிந்தவின் வலது கையிடம் நேற்று: மகனிடம் 3ஆம் திகதி விசரணை!

Pagetamil

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Pagetamil

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Pagetamil

Leave a Comment